Friday, December 26, 2008

சந்தித்த அன்று ......


ஸ்தம்பித்தோம் இருவரும்

சந்தித்த அன்று ......

உன் விழிகளை ஊடுருவிப் பார்த்து

நினைவிருக்கிறதா என்று கேட்க

எத்தனித்த வேளையில் ....

நினைவில் கொள்ளாதே

நொடியாய் போன நாட்க்களை என்று

என் விழிகளை நீ பார்த்தாய் ...



ஸ்தம்பித்தோம் இருவரும்
சந்தித்த அன்று ......

அன்றும் இதே மௌன மொழிதான்

இன்றும் அதே மௌன மொழிதான்

தொடர்கிறது நமக்குள் ...

இருந்தும் ஆயிரம் விளக்கங்கள்

பகிர்ந்து கொண்டோம் விழிகளால்

மௌனம் கலையப்படாமலே ...



ஸ்தம்பித்தோம் இருவரும்
சந்தித்த அன்று ......

இரைச்சல் மிகுந்த வீதியில்

உன் மௌன வார்த்தைகள் மட்டும்

என் செவிகளில் ....

இறந்த காலங்களை மீண்டும்

உயிர் பெறச் செய்தாய்

உன் கண்களில்



விலகினோம் தலையசைத்து

சுழலச் செய்தது மீண்டும் பூமி ..!!!





4 comments:

  1. வலைப்பூவும் உங்கள் வலையில் உள்ள பூவும் அழகு.

    உங்கள் கவிதையும் தான் ...

    ReplyDelete
  2. அழகான கவிதை, வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  3. அருமையான வரிகள்! வாழ்த்துக்கள் நண்பா!

    ReplyDelete