Friday, December 26, 2008

சந்தித்த அன்று ......


ஸ்தம்பித்தோம் இருவரும்

சந்தித்த அன்று ......

உன் விழிகளை ஊடுருவிப் பார்த்து

நினைவிருக்கிறதா என்று கேட்க

எத்தனித்த வேளையில் ....

நினைவில் கொள்ளாதே

நொடியாய் போன நாட்க்களை என்று

என் விழிகளை நீ பார்த்தாய் ...



ஸ்தம்பித்தோம் இருவரும்
சந்தித்த அன்று ......

அன்றும் இதே மௌன மொழிதான்

இன்றும் அதே மௌன மொழிதான்

தொடர்கிறது நமக்குள் ...

இருந்தும் ஆயிரம் விளக்கங்கள்

பகிர்ந்து கொண்டோம் விழிகளால்

மௌனம் கலையப்படாமலே ...



ஸ்தம்பித்தோம் இருவரும்
சந்தித்த அன்று ......

இரைச்சல் மிகுந்த வீதியில்

உன் மௌன வார்த்தைகள் மட்டும்

என் செவிகளில் ....

இறந்த காலங்களை மீண்டும்

உயிர் பெறச் செய்தாய்

உன் கண்களில்



விலகினோம் தலையசைத்து

சுழலச் செய்தது மீண்டும் பூமி ..!!!





Monday, December 22, 2008

யாரவள்...


நீ யாரென்றே தெரியாமல்
எதிர் பார்ப்புடன் தனிமையில் நான்...


எதிர்பார்கிறேன் உன்னை
என் சுவாசக்காற்றும் நீயாகிப்போனதால்...


வெட்கம் இருக்கவேண்டியதுதான்
அதற்காக கனவிலுமா வர மறுப்பது?....


சிரிக்கவும் செய்கின்றனர் சிலர்
தன்னிச்சையாய் நான் சிரிப்பதைக் கண்டு ...


என் பேனாவும் கவலைக்கொள்கிறது
காதல் கவிதை எழுதாததை எண்ணி ...


மாடம் எழுப்பியுள்ளேன் மனதிற்குள்
மங்கை அவள் யார் என்றே தெரியாமல்...


ஒருவகையில் நானும் சுயநலவாதிதான்
உன்னைத் தெரியாமல் உன்னுடன் வாழ்ந்து கொண்டிருப்பதால்...


இனி வரப்போகும் நாட்களிலாவது
அறிமுகப்படுத்திக் கொள்வாயா ? ...


Friday, December 19, 2008


நீ பேசிய முதல் வார்த்தை
என் மனதில் பதிந்தவை மட்டும்...
நான் பேசிய முதல் வார்த்தை
உன்மனதில் பதிந்தது மட்டும்.....
திரும்பி பார்த்தால் தெரிவதற்கு
பின் தொடரும் நிழல் அல்ல....

நினைவின் உள்ளே சுழலும்
நியாபக சுவடுகள் தோழியே......
நிழலாய் தொடர்ந்து
இருட்டில் மறைய மனம் இல்லை........
நினைவாய் தொடரவே ஆசை



வென்மேகங்கள் விடைபெற்று
கருநிறத்தை உடுத்திக்கொண்ட தருணம்
விரித்துக்கொண்டாள் தோகையை
அரங்கேற்றம் நடத்த மயிலானவள் ...

ஈரக்காற்று முகத்தில் அறைந்ததும்
இடக்கண் மூடி வலக்கையின் உதவியுடன்
ஜன்னல் சாத்தினாள் பஸ் பயணத்தின்
ஜன்னலோர இருக்கைக்காரி ..........

தன் மேனியை சாரல் தொட்டதும்
இட வந்த முத்தத்தை நிறுத்தி
சேலை தலைப்பால் அவன் தலை மூடி
வீட்டுக்குள் புகுத்திக் கொண்டால் தன்னை ... கைக்குழந்தைகாரி



விற்று விட்ட வெள்ளரி போக
மழையை வசை பாடிக்கொண்டே
எஞ்சியவற்றை கூடையில் திணித்தாள்
சாலையோரம் கடை நடத்தும் கிழவி...



நாலு கால் கயிற்றுக் கட்டிலில்
ஒரு கால் உள்ள ஊன்று கோள் துணையுடன்
மழையிடம் இருந்து தன்னை
பத்திரபடுத்திக்கொள்ள எழும் முதியவர் ...




இதழை தாங்குவதற்கே கர்வம் கொண்ட மொட்டுக்கள்
அதன் மீது விழுந்த மழைத்துளிகளின் அழகில்
நறுமணம் பரப்புவதை நிறுத்தி விட்டன
என்னைப்போல் தன்னை மறந்து


மழை காலத்தில் நனைந்தபடி
நான் கண்ட நிஜங்கள் இவை யாவும்











Sunday, December 14, 2008


வாழ்ந்திடவே ஆசைபடுகிறேன்...நண்பர்களாகிய
உங்களுடன்,இந்த ஒரு ஆயிள் மட்டும்!!!

வீழ்ந்திடவே ஆசை ...உன்னில்
நான் தோன்றும் பொழுது!!!

மலர்ந்திடவே ஆசை...மலரை போல்
இருந்தும் வாடிவிடுவேன்!!! இன்று மாலையில் .....!


ஆனால் உனது நாசியில்
எனது வாசனை இருக்கும் .........நட்புடன்...

மடத்தனமாய்...!



வருடிச் செல்லும் காற்று.......
சில நேரம் குளுமையாய் ..
சில நேரம் இதமாய்,


வந்தே தீரும் இளங்கதிர்.....
சில நேரம் மிதமாய்....
சில நேரம் மிதமிஞ்சி,


இவைகள் இரண்டும் இயற்கையின் மிடுக்கு
நம்மைப் போல் .செயற்கை அல்லாமல் ...


சில விளங்காதவை என்னிலும் உண்டு
சில விளங்காதவை உன்னிலும் உண்டு ...
ஒரு சில மவுனங்களால்.....


இருந்தும் இன்னும் பகிர்ந்து கொள்கிறோம் ..
நான் உனக்கு தெரியாமலும் நீ எனக்கு தெரியாமலும் !!!!!!!!!
அதுவும் மடத்தனமாய்.


இதில் விதைக்க படுவது என்னவோ ...
நம் எண்ணங்கள்மட்டுமே...விளைந்தவையோ!
நம்மை எதிர் பார்க்காமல்...சொல்லப்போனால் முதிர்ச்சியாய்...

கனவே...!!!


நீண்டு கொண்டே செல்கிறது
இரவுகள் போல் கனவுகளும்...

இரவின் போர்வைக்கு விடுப்பு கொடுத்து
இன்றுடன் என்னை இணைத்துக் கொண்ட பின்பும்
என்னுடன் கைகோர்த்து நடக்கிறது
நிழல் போல் தொடர்ந்து...!

ஆயிரம் கோடி ஆசைகளிருந்தாலும்
அரை நொடியில் அடிமையாகி விடுகின்றன
உன்னைத்தவிர என்னிடத்தில்....

உனக்குள் நான் புகுந்து விடவா?
................அல்லது....................
எனக்குள் நீ புதைந்து போவாயோ?

புதைந்து,,, புகைந்து போகாதே!
லட்சியம் எனும் கனவே...!!!

Saturday, December 13, 2008

என் கண்ணீர்...


உங்களுக்கு மட்டுமல்ல...
எனக்கும் சொந்தம் கண்ணீர்...
விழியில் தோன்றி தரை தொடுமுன்
உலர்ந்துவிடும்
........... அல்லது
தலையணைக்குள் புகுந்துவிடும்....

இவனுக்கோ விழியில் தோன்றி
உணர்வில் புகுந்து.... உயிரில்
கலந்துவிடும்
இமை கூட அறியாவண்ணம்.....

தனிமையில் நடந்து செல்கையில்
கடலும் அமைதியாகிறது... இவனின்
அழுகை ஓசை கேட்க........

கண்ணீரும் கண்ணீர் விடுகிறது
கடலும் அமைதி கொள்வதை கண்டு...
இவன் செவி மட்டுமே அறியும்
அழுகையின் ஓசையை.......!!!

நீயாகவே இரு....

ஒரு சிறு ஆசை மட்டும் என்னுள்..
என்னுள் உள்ளது உன்னைப்பற்றியே!!!

இருக்க வேண்டாம் உண்மையாய்...
என்னிடம் பழகும் போது..
நான் அதை எதிர்ப்பார்க்கவுமில்லை

உனது உண்மையான சிறு சிறு கோவத்தை
என்னிடம் காட்டு எதிர்ப்பார்கிறேன்
இதை மட்டும்...

என் கைபிடித்து வழிகாட்ட வேண்டாம்
எங்கு சென்றாலும் இவ்வுலகத்தின்
உள்ளேயே நமது பயணங்கள்...

ஆதலால் தோழமையே.....
என்னிடம் பழகும் காலங்கள் வரை....
நீ.... நீயாகவே இரு, இதுவே எனது ஆசை....