Thursday, January 1, 2009

என் தோழியானவள்


என் தோழியைப் பற்றி சொல்லப் போவதால்
சிறிது கர்வத்துடன் வாசம் செய்கிறேன் ...

உனக்கே தெரியாது இதழோரம்
புன்னகை வாழ்ந்து கொண்டிருக்கும்
இவள் உன்னிடம் பேசும் போது ..அதுவும்
உனக்காய் உன் மனதுக்கு மட்டுமாய் ...

காதலிப்பதால் மட்டுமே
மறக்கப் படுவதில்லை உலகம் ...
இவள் நட்பு கிடைத்த பிறகு
நான் வாழ்ந்த உலகத்தை மறந்ததால் ...

ஒரு நாள் மட்டும் இவளின் நட்போடு
வாழ்ந்தால் போதும் என என்னும் மூடன் அல்ல
ஒவ்வரு நாளும் இவள் நட்பென்ற சுவாசத்தில்
உயிர் வாழ துடிக்கும் சுயநலக்காரன் தான் நான்.....


நிலவானவள்,வெள்ளி நீரோடையானவள்
பனியானவள்,பசும்பொன்னானவள்
என்று பொய் சொல்ல விரும்பவில்லை...

ஏனெனில் தன் பெருமை சொல்ல
இவளை அணிந்து கர்வம் வர
வலம் வருகின்றன இயற்கைகள் ...

பகலிலும் விண்மீன்கள் தோன்றுவதால்
காதல் கொள்வாய் நீயும்
உங்களின் நட்பின் மீது.........

உன்னுடனே போர் புரியும்
உன் புலன்கலனைத்தும் ....மீண்டும் சந்திப்போம்
என்று நீ சொன்ன அந்த கணம் முதல்

எழுதி விட மறுத்த
என் பேனா கூட காத்திருகின்றன
காகிதத்தில் இவளின் அழுத்தங்களை வரைய....

எழுத வேண்டும் நிதம் இருமுறை என எண்ணினேன்.
ஆனால் நிமிடமும் போதவில்லை
உயிர் பெற்ற விட்ட எங்கள் நட்பால்

கற்பனையின் கனாக்காலங்கள் இல்லை இவை
அவளின் நட்புடன் கைகோர்த்து
நடக்கும் நிகழ்காலங்கள் ..


இவள் இல்லாமல் போனால் தோன்றி இருக்காது
இவ்வுலகில் கவிதைகளும் .......நாங்கள் பேசும்
நேரத்தில் புவியும் புள்ளியாகிப் போனதால் .....


ஒரு பக்கம் மட்டும் என்று எண்ணி
இரு பக்கமாய் தொடர்ந்து... முடிந்தும் விட்டது
அவளின் சுவடுகளை சுமந்து இப்புத்தகமும் ....


ஆம் ...நட்பின் உன்னத உணர்வுகளை
சில புத்தகங்களால் விழுங்கிவிட முடியாது
இவளைப் போன்ற தோழி கிடைத்து விட்டால் ..

1 comment:

  1. //என் தோழியைப் பற்றி சொல்லப் போவதால்
    சிறிது கர்வத்துடன் வாசம் செய்கிறேன் //

    thozhamai pathi pesanumna nichayam karvam irukkathan seiyum....

    //காதலிப்பதால் மட்டுமே
    மறக்கப் படுவதில்லை உலகம் ...
    இவள் நட்பு கிடைத்த பிறகு
    நான் வாழ்ந்த உலகத்தை மறந்ததால் //

    nalla natpu ulagai maraka seiyum enpathu unmai than ganesha...

    //ஒவ்வரு நாளும் இவள் நட்பென்ற சுவாசத்தில்
    உயிர் வாழ துடிக்கும் சுயநலக்காரன் தான் நான்//

    vazhkaiyin iruthi moochu varai inda natpu nilaikka vazhuthukkal...

    //நிலவானவள்,வெள்ளி நீரோடையானவள்
    பனியானவள்,பசும்பொன்னானவள்
    என்று பொய் சொல்ல விரும்பவில்லை...

    ஏனெனில் தன் பெருமை சொல்ல
    இவளை அணிந்து கர்வம் வர
    வலம் வருகின்றன இயற்கைகள் ...

    பகலிலும் விண்மீன்கள் தோன்றுவதால்
    காதல் கொள்வாய் நீயும்
    உங்களின் நட்பின் மீது.........

    உன்னுடனே போர் புரியும்
    உன் புலன்கலனைத்தும் ....மீண்டும் சந்திப்போம்
    என்று நீ சொன்ன அந்த கணம் முதல்//

    ethannai uyarvana edam ungal thozhikku....
    koduthu vaithaval than....ungalin natpu kidaithatharku...

    //ஆம் ...நட்பின் உன்னத உணர்வுகளை
    சில புத்தகங்களால் விழுங்கிவிட முடியாது
    இவளைப் போன்ற தோழி கிடைத்து விட்டால் ..//

    oruoru manithanukkum ippadi patta natpu kidaithuvittal ayiram ayiram kaviyam padaikkum alavuku unarvugal migunthu vidum...:-)

    ungalin natpu endrendrum needithu irukka vazhthukkal Ganeshaa...

    ReplyDelete