Saturday, January 17, 2009

பேசிவிடு




தார்ச் சாலையில் அவ்வப்போது
நதிகளின் சங்கமும் நிகழ்கிறது
நீ நடந்து வருகையில்
கூந்தல் விட்டு விடைபெறுவதால்
உடனே உயிர் துறக்கின்றன
நீ சூடிய மலர்கள் ....

மனதின் துக்கமும் இவன் மனதும்
உன் நிழல் தேடும் தருணங்களில்
இரவுகளே பதில் சொல்கின்றன...
ஒரு சில உன் மௌனங்களால்
மௌனமாய் எரிகிறேன் நான்.......
நீ விழி விட்டு விலகும் நொடியில்
ஸ்தம்பிக்கும் என் உலகங்கள்

ஒரு முறையேனும் பேசிவிடு என்னிடம்
இந்த ஆயுள் கடந்துவிடுவேன் ..

1 comment:

  1. //தார்ச் சாலையில் அவ்வப்போது
    நதிகளின் சங்கமும் நிகழ்கிறது
    நீ நடந்து வருகையில்
    கூந்தல் விட்டு விடைபெறுவதால்
    உடனே உயிர் துறக்கின்றன
    நீ சூடிய மலர்கள் ....//

    கவித்துவமாயிருக்கு... நல்ல வார்த்தை கோர்வை கணேஷா...

    //மனதின் துக்கமும் இவன் மனதும்
    உன் நிழல் தேடும் தருணங்களில்
    இரவுகளே பதில் சொல்கின்றன...

    ஹம்ம்ம்ம்...:-))

    ஒரு சில உன் மௌனங்களால்
    மௌனமாய் எரிகிறேன் நான்.......
    நீ விழி விட்டு விலகும் நொடியில்
    ஸ்தம்பிக்கும் என் உலகங்கள்
    ஆமாப்பா பக்கத்துல இருக்க வரைக்கும் ஒன்னும் பேசாதீங்க போன பிறகு உருகி என்ன பயன்....

    :-))

    //ஒரு முறையேனும் பேசிவிடு என்னிடம்
    இந்த ஆயுள் கடந்துவிடுவேன் .. //

    அவங்கதான் பேசணுமா நீங்களே பேச வேண்டியதுதானே...;-)

    அழகான கவிதை கணேஷா...

    வாழ்த்துகள்...

    ReplyDelete