Sunday, January 11, 2009

ஆயுள் கைதியாய்




இமைக்கவும் மறந்து ....நீ சென்ற திசை நோக்கி

குவித்தேன் பார்வையை பல முறை

தற்ச்செயலாய் வெட்டிச் சென்ற உன் ஒரு நொடி பார்வையால் !!!

நேரில் நீ பேசிய வார்த்தைகளும் ஒழுங்கு பெறவில்லை என்னருகில் நீ வாசம் செய்த போது ......

வளர்ந்து தேயும் பிறை போல
நீ நகர்ந்த பின் கோர்வையாக்கினேன்
காற்றின் வழி கலந்து என் செவி சேர்ந்த
உன் உரையாடலை ...
அப்பொழுதும் நீ விட்டு சென்ற
அச்சம் மட்டுமே மிச்சமாய் ..

வாசலில்லா முற்றத்திலும் முட்ட நேர்ந்தது
வாஞ்சையான உன் வார்த்தைகளால் ...
இரவெல்லாம் கனாக்களில் ஆட்கொண்டது போதாமல்
கண் விழிக்கையிலும் உன் முகம் ..
கோடையிலும் பனித்தென்றல் என்னுள்
நீயும் நானாகிப் போனதால்
ஒழுங்கற்றே முடிகிறது எனது கிறுக்கல்களும்
வரைவும் நீயாகிப் போனதால் .....
தப்பிச் செல்ல வழி இல்லாமல்
ஆயுள் கைதியாய் உன் நினைவுச்
சிறைதனில்















2 comments:

  1. //வளர்ந்து தேயும் பிறை போல
    நீ நகர்ந்த பின் கோர்வையாக்கினேன்
    காற்றின் வழி கலந்து என் செவி சேர்ந்த
    உன் உரையாடலை ...//

    அருகிலிருக்கும் போது அருமை தெரிவதில்லை... விட்டு விலக விலக அன்பு கூடத்தான் செய்கிறது....

    //கோடையிலும் பனித்தென்றல் *என்னுள்
    நீயும் நானாகிப் போனதால்* //

    நான் மிகவும் ரசித்த வரிகள்...

    //ஆயுள் கைதியாய் உன் நினைவுச்
    சிறைதனில் //

    மாட்டிக்கிட்டீங்களா கணேஷா??

    :-))))

    ReplyDelete