Saturday, January 10, 2009

மலைமகள்


செந்நிற மேனியாள் பச்சை பட்டுடுத்தி
நெற்றியில் கதிரவனை திலகமிடும் நேரம்
தோள்தனில் அமர்ந்து காதல் பேசி
கலைகின்ற வெண்மேகங்களும்
சர சர சப்தங்களுடன் இறந்து சரியும்
சருகுகளின் ஸ்பரிஷமும்
ஆயிரம் கிளைகள் கொண்டாலும்
அமைதியாய் பறவை இசை கேக்கும் மரங்களும்
அதிகாலை பனி படர காத்திருக்கும் இலைகளும்
கண்ணுக்கும் தெரியாமல் கைகள் இல்லாமலும்
முடிக்கற்றை கலைக்கும் இளங்காற்றும்
மறைத்திருந்த விண்மீன்கள் விழித்துக்கொள்ள
கிழக்கு நோக்கி பயணிக்கும் கதிரவனும்
என் சுவாச பையில் உரிமையுடன்
வாசம் செய்யும் காட்டுப்பூக்களின் நறுமணம் மிகுந்த
அத்துமீறல்களும் ,கன்னக்குழி பள்ளங்கள்
இடரும் போது கைகொடுக்கும்
ஆலமர விழுதுகளும்
காணாமல் போகும் கானல் நீர் காலங்களில்
பல நிமிடம் எனை திறந்து
உனக்குள் மறைந்தேன் உனதழகில்
மலைமகளே .....

2 comments:

  1. எத்தனை அழகாய் ரசனையாக மலைமகளின் அழகை சொல்லிருக்கீங்க கணேஷ்...வாழ்த்துகள் தோழா!!

    //கண்ணுக்கும் தெரியாமல் கைகள் இல்லாமலும்
    முடிக்கற்றை கலைக்கும் இளங்காற்றும் //

    இந்த வரிகளை மிகவும் ரசித்தேன்..

    //உனக்குள் மறைந்தேன் உனதழகில்
    மலைமகளே .....//

    உண்மையில் இந்த வரிகள் என்னையும் மலைமகளின் அழகில் மறையத்தான் வைக்கிறது....

    ReplyDelete