மார்புக் கூட்டில் மகிழம் பூக்களின்
மல்யுத்தம் மஞ்சள் மாலையில்
மறைந்திருந்து நீ பார்த்த முதல் ...
பகலிலும் விழா கோலம் பூனும் சொப்பனங்கள்
சாரல் நினைவுகளில் என் நித்திரையை
இரவுகளில் நீ ஆட்க்கொண்டதால் ...
என்னில் விளையாடும் சதுரங்கத்தில்
உன்னால் வெட்டுப்பட்டு விழும்போதெல்லாம்
சொர்க்கத்திலேயே விழ நேர்கிறது ...
இளஞ்சோலை நினைவுகளை இளமையாக்கிக் கொண்டே
நிதம் யுத்தம் செய்து என் செல்களை மட்டுமே
உயிரிழக்கச் செய்யும் உன் வெற்றிகள் ...
உன் விழி என்மீது படரும் நிமிடங்களில்
என் இதயத்தின் மௌன வாசலில்
தீபச் சுடர்களின் அரங்கேற்றம் .....
சீ ....போடீ!!! கோர்வையாக்க இயலவில்லை
எழுதும் என் கவிதையை
இதிலும் நீ வாசம் செய்வதால் ....
//மார்புக் கூட்டில் மகிழம் பூக்களின்
ReplyDeleteமல்யுத்தம்
மஞ்சள் மாலையில்
மறைந்திருந்து நீ பார்த்தது முதல்...//
அட அழகான ஆரம்பம் கணேஷா....
//பகலிலும் விழா கோலம் பூணும் சொப்பனங்கள்
சாரல் நினைவுகளில் என் நித்திரையை
இரவுகளில் நீ ஆட்க்கொண்டதால்...//
பகல்லே தூங்க கூடாது கணேஷா...;-)
//என்னில் விளையாடும் சதுரங்கத்தில்
உன்னால் வெட்டுப்பட்டு விழும்போதெல்லாம்
சொர்க்கத்திலேயே விழ நேர்கிறது...//
சொர்க்கத்திலயே இருக்கீங்க போல...
கவிதையின் அழகு கூடிட்டே போகுதே....
/இளஞ்சோலை நினைவுகளை இளமையாக்கிக் கொண்டே
நிதம் யுத்தம் செய்து என் செல்களை மட்டுமே
உயிரிழக்கச் செய்யும் உன் வெற்றிகள்...//
காதலில் இது மாதிரி தோல்விகளும் வெற்றிகளும் தான் அழகு....
//உன் விழி என்மீது படரும் நிமிடங்களில்
என் இதயத்தின் மௌன வாசலில்
தீபச் சுடர்களின் அரங்கேற்றம்.....//
ஹைய்ய்யோ பத்திகிச்சு பத்திகிச்சா....
//*சீ ....போடீ!!!* //
இது ரொம்ப யதார்தமாயிருக்குப்பா...
//கோர்வையாக்க இயலவில்லை
எழுதும் என் கவிதையை
இதிலும் நீ வாசம் செய்வதால்....//
இவ்வளோ அழகா எழுதிட்டு இயலவில்லைன்னு சொல்லுறீங்களேப்பா....
உங்கள் காதல் வெற்றிப்பெற மனமார்ந்த வாழ்த்துகள் கணேஷா....
வரிகள் ஒவ்வொன்றும் மிக அழகு!!
ReplyDeletethnx agilam
ReplyDeleteromba nantri thozhi Divya
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவாழ்த்துக்களுக்கு நன்றி வராத...
ReplyDeletenanri vendam kavithaithan venummmmmmm
ReplyDelete