பின் சென்ற நாட்களின்
ஏக்கங்கள் கனவுகளாய்
உலா வருகின்றன உறக்கத்தில் ..
கண்ணீர் ஊறிய தலையணைகள்
கவசம் தேடுகிறது இரவுகளில்
ஊறிய தலையணையும்
ஒற்றியெடுத்த தோள் துண்டும்
பட்டிமன்றம் நடத்துகின்றன
மறுபக்கம் இல்லா பாயில்...
கஞ்சி குடிக்க மறந்தோடிய
பொழுதுகளில் கனகாம்பரம்
கேட்டனுப்பும் மனைவி
கனகாம்பரம் எல்லாம் வியர்வை
மணம் என்றாள் மாலையில்
குடித்த தண்ணீர் வயிற்றுக்குள்
இருந்தும் ஈரம் காணவில்லை
தொண்டைக்குழி நாளங்கள்..
விழித்ததும் தெரிந்தது
நித்திரையில் கனவுகளும்
ஏக்கங்களாய் !!!........
இருந்தும் ஈரம் காணவில்லை
தொண்டைக்குழி நாளங்கள்..
விழித்ததும் தெரிந்தது
நித்திரையில் கனவுகளும்
ஏக்கங்களாய் !!!........
கீழ்தட்டு வர்கத்தின் ஏக்கங்களை பாமரனின் அன்றாட கஷ்டங்களை உங்கள் எழுத்தின் மூலமாக கவிதையாக மாற்றி எங்களையும் சிந்திக்க வைத்தமைக்கு நன்றி.. உங்கள் கூரிய சிந்தனை மேலும் பல கவிதைகளாக உரு பெற வாழ்த்துகிறேன்
ReplyDeleteஉங்களின் பாராட்டுக்களே கவிதையென பொழிகிறது குருவு ..அழகாய் ரசித்ததற்கும் ஆதரவாய் விமர்சித்ததற்கும் நன்றிகள் பல குருவு :)
ReplyDelete//கஞ்சி குடிக்க மறந்தோடிய
ReplyDeleteபொழுதுகளில் கனகாம்பரம்
கேட்டனுப்பும் மனைவி
கனகாம்பரம் எல்லாம் வியர்வை
மணம் என்றாள் மாலையில்//
வறுமை கனகாம்பரத்திற்கு கூட மணம் கொடுத்துவிட்டது..
உங்களின் இந்த கற்பனை மிக அருமை...
வறுமையின் அவலம் கவிதையிலும் படத்திலும் அருமையாக எடுத்து சொல்லியிருக்கீங்க..
வாழ்த்துகள் கணேஷ்..தொடரட்டும் உங்களின் கவிப்பயணம்...
கவிதையழகை அழகாய் புரிந்து கொண்டு வாழ்த்தியதற்கு நன்றி.. நட்சத்திரா :)
ReplyDelete