Monday, April 19, 2010

திருஷ்டி சீற்றம்

எங்கள் நாக்கு துருத்தலின்
கோர அச்சுறுத்தல்
குழந்தைகளுக்காக அல்ல
முகம் கொண்ட உடலற்ற
உயிரே அற்ற மாயமான
எங்களைக் காட்டி பிஞ்சுகளை
அச்சுறுத்தும் நஞ்சு மனிதருக்கே
என் குடல் வாடும் பிரம்மன்
வறுமை அறிந்தே சிருஷ்டித்தான்
முகம் மட்டும் போதுமென திருஷ்டியாய்

2 comments:

  1. வித்தியாசமான தலைப்பு எடுத்து அதற்கு இது வரை யாருமே நினைத்திராத புதுமையான சிந்தனைய எடுத்து சொன்ன உங்க எண்ணங்கள் ரொம்பவே அழகு... இனிமேல் எங்கு அந்த பொம்மைகளை பார்த்தாலும் கண்டிப்பா நீங்க சொன்ன கருத்து எனக்கு ஞாபகத்தில் வரும்...

    ReplyDelete
  2. உங்களின் இந்த இனிதான பாராட்டு மகிழ்விக்க செய்கிறது என்னை ..நன்றி குருவு :)

    ReplyDelete