Wednesday, April 14, 2010

காத்திருந்தது போல்
தூறத் தொடங்கியது
இத்தனை நாள்
மௌன மொழி பேசிய
மழைத் துளி
நாம் சேர்ந்த அன்று ...

உன் கன்னப் பருக்கள்
வேடம் பூண்டு இருவரையும்
ஆட்கொள்ளத் தொடங்கியது
மழைத்துளி ...நம்
தேநீர் பருகலின் போது

சாரலாய் நானுனைத்
தொடும் தருணங்களில் ..
வெக்கப்பட்டு தான்
கைவிடுகிறதோ?
மழைத்துளியை மேகங்கள்!!

ஒன்றையொன்று
துரத்திக்கொண்டே வரும்
மழைத்துளிகள் சிதறியதும்
கூடல் கொள்வதை கண்சிமிட்டி
விளக்கிய போது ..

மின்னல் சிணுங்கலுடன்
இமைகள் அகன்று
நீ முறைத்தப் பார்வையில்
தேநீர் கோப்பை சிவக்கிறது..

மழைநீர்த் திவளையாய்
நான் கண் சிமிட்டியதும்
உன் சிக்கன சிரிப்பில்
சில்லிட்டது தேநீர்..

மழை நின்றும் மரஇலைகளில்
தங்கும் மழைத் துளிப்போல்
நிரந்தரமாய் தங்கிகொண்டது
நம் பார்வையில் காதல் துளி ...

1 comment:

  1. மழை கவிதை இதம் ...இளமையின் ஆர்ப்பாட்ட துடன் மழை சாரலில் தேநீர் பருகல் அற்புதம் .....:) நெடுந் கவிதை நீண்டநாட்களுக்கு பிறகு கோடை மழை போல.. வாழ்த்துக்கள் மேலும் பல கவிகள் படைக்க.. Hearty wishes Alai...

    ReplyDelete