Sunday, September 13, 2009

யதார்த்தங்கள்

யதார்த்தங்கள் சில சமயம்
காயங்களையே அர்ப்பணிக்கிறது...

இங்கு உன்னையும் என்னையும்
பற்றியுமான யதார்த்தங்கள்
வடம் பிடித்து இழுப்பவர்
ஆளுகைக்கு ஆட்பட்ட
ஆண்டவன் இல்லா தேர் போல்...

யதார்த்த மனிதர்கள்
யதார்த்த மனங்களை
ஏன் என்றே தெரியாமல்
கொய்து எறிகின்றனர்
யதார்த்தத்தின் ஆழம் புரியாமல்...

சிறு நடைப் பயணத்திலும்
சிற்றுண்டிச் சாலையிலும்
டீக் கடை கலாட்டாக்களிலும்
இலவச இணைப்பாகவே
மொழிப் பெயர்க்கப் படுகின்றன
நம்மைப் பற்றிய யதார்த்த வக்கிரங்கள்
ஆம் ...ஏன் என்றேத் தெரியாமல் ...

சந்தர்ப்பங்களைத் தேடும்
சந்தர்ப்பவாதிகளுக்கு
சாசனம் கொடுக்கும்
சந்ததியினர் இருக்கும் வரை
காயச் சுவடுகளை நம் உள்ளங்களில்
பதித்துக் கொண்டே பயணிக்கும்
இது போன்ற சில யதார்த்தங்கள்.

4 comments:

  1. வாழ்வின் யதார்த்தங்களை மிக யதார்த்தமான கவிதையாக பதித்திருக்கிறீர்கள்....


    //சிறு நடைப் பயணத்திலும்
    சிற்றுண்டிச் சாலையிலும்
    டீக் கடை கலாட்டாக்களிலும்
    இலவச இணைப்பாகவே
    மொழிப் பெயர்க்கப் படுகின்றன
    நம்மைப் பற்றிய யதார்த்த வக்கிரங்கள்
    ஆம் ...ஏன் என்றேத் தெரியாமல் ...//

    ஏன் என்றே தெரியாத வக்கிரங்களை எண்ணி எதற்காக காயப்படனும்??

    //சந்தர்ப்பங்களைத் தேடும்
    சந்தர்ப்பவாதிகளுக்கு
    சாசனம் கொடுக்கும்
    சந்ததியினர் இருக்கும் வரை
    காயச் சுவடுகளை நம் உள்ளங்களில்
    பதித்துக் கொண்டே பயணிக்கும்
    இது போன்ற சில யதார்த்தங்கள்.//

    இப்படிப்பட்ட யதார்த்தங்களுக்காய்
    உள்ளங்கள் காயப்படுவது வீணே...

    நல்லாருக்கு கணேஷ் கவிதை...

    ReplyDelete
  2. வாழ்த்தியதற்கும் ஊக்கப்படுத்தியதற்கும் நன்றி தோழி

    ReplyDelete
  3. நல்ல சொல்லாடலுடன், அருமையாக வார்த்திருக்கிறீர்கள் நண்பரே!
    //
    யதார்த்தங்கள் சில சமயம்
    காயங்களையே அர்ப்பணிக்கிறது...
    //
    ஒருமை, பன்மை கவனியுங்கள் இங்கே
    "அர்ப்பணிக்கின்றன" என்று வருவதே சரியல்லவா?
    தொடர்ந்து நிறைய எழுத வாழ்த்துகள்!

    ReplyDelete
  4. இறுதியில் சில யதார்த்தங்கள் என்று முடித்துள்ளேன்..

    சில யதார்த்தங்கள் தான் தனிமைப் படுத்தப்படுகின்றன ..ஆகவே ஒருமை தேவைப்பட்டது ..

    எடுத்துக் காட்டியதற்கும் ..வாழ்த்தியதற்கும் நன்றி ..நண்பர் நாவிஷ் செந்தில்குமார் அவர்களுக்கு :))

    ReplyDelete