பாதி புதைந்திருந்தாலும்
இறுக்கமாகவே
பற்றிக்கொண்டுள்ளது
நங்கூரம் என்னை ..
தத்தளித்துக் கொண்டே
தண்ணீரில்
தவம் செய்வதால்
மதம் பிடித்துவிடும்
என்றெண்ணி
என்னில்
இணைத்து உன்னை
மூழ்கடித்தானோ ????
மூழ்கினாலும் முட்டிய
இடத்திலேயே நிலையாய்
நிற்கிறாய் நீ
மடிக்குள் சிறைப்பட்டு
துடிக்கும் மீன்களின்
செதில்கள் தினம்
என்னில் சிதறுவதால்
சாத்தியமே எனது
தத்தளிப்புகளும்....
விடியட்டும்
விடுதலை கொடுப்பான்
மீனவன் இருவருக்கும்...
நம் விடுதலையின்
பின்னே
பல மரணங்கள் நிச்சயம்
ஆதலால்
என்னை இன்னும்
இறுகிப் பற்றிக்கொண்டு
மீள நினைக்காமல்
மூழ்கியே இரு ...
//பாதி புதைந்திருந்தாலும்
ReplyDeleteஇறுக்கமாகவே
பற்றிக்கொண்டுள்ளது
நங்கூரம் என்னை..//
அதுதானே நங்கூரத்தின் இயல்பு...
//தத்தளித்துக் கொண்டே
தண்ணீரில்
தவம் செய்வதால்
மதம் பிடித்துவிடும்
என்றெண்ணி
என்னில்
இணைத்து உன்னை
மூழ்கடித்தானோ ????//
ஹம்ம்ம் அழகான வரிகள்..
அர்த்தமாயிரம் தரும் வரிகள்
//மூழ்கினாலும் முட்டிய
இடத்திலையே நிலையாய்
நிற்கிறாய் நீ//
ஹம்ம்...ரசனை...
//மடிக்குள் சிறைப்பட்டு
துடிக்கும் மீன்களின்
செதில்கள் தினம்
என்னில் சிதறுவதால்
சாத்தியமே எனது
தத்தளிப்புகளும்....//
செதில்களின் சிதறலுக்காய்
தத்தளிப்பு...
மென்மையான மனதை காட்டுகிறது...
//விடியட்டும்
விடுதலை கொடுப்பான்
மீனவன் இருவருக்கும்//
விடுதலையினை எதிர்நோக்கும் விதம் ஏக்கம்..
//நம் விடுதலையின்
பின்னே
பல மரணங்கள் நிச்சயம்//
துன்பங்களின் மரணம்தானே...
நிச்சயம் துன்பம் தொலைந்து
புது விடியல் மலரட்டும்...
//ஆதலால்
என்னை இன்னும்
இறுகிப் பற்றிக்கொண்டு
மீள நினைக்காமல்
மூழ்கியே இரு...//
மிக ஆழமான வரிகள்....
மூழ்கியேயிருந்தால் முத்தாவது நிச்சயம்...
மூழ்கியப்பொழுதின் சிரமம் முத்தாகும் போது
வாழ்கை சிறக்குமே...
வாழ்த்துகள் கணேஷா...
ரொம்பவே அழகாயிருக்கு....
ஆழமான அர்த்தங்களுடன்....
ReplyDeleteகவிதை மிக அருமை ஜிகே !!!
This comment has been removed by the author.
ReplyDeleteவாழ்த்தியதற்கும் ஊக்கப்படுத்தியதற்கும் நன்றி தோழி maria
ReplyDeleteவாழ்த்தியதற்கும் ஊக்கப்படுத்தியதற்கும் நன்றி தோழி Anit
ReplyDelete