Sunday, October 11, 2009

மறைவிடம்...

சிரித்தோடி சில்வண்டு பிடித்து
சிறைப்பட்ட வண்டை
மறைக்க தேடிய மறைவிடம்...

சீருடையணிந்து சிலேடில் கிறுக்கிய
பொம்மையை ஆசிரியர் கண்படாமல்
தோள்பையில் மறைக்க தேடிய
மறைவிடம்...

வயது வித்யாசமின்றி
திடீரென தோன்றும் காதலை
உணர்ச்சியின் உலைகளுக்கு
பிடிபடாமல் மறைக்க தேடிய
மறைவிடம்...

அரைசாண் வயிற்றுக்கு
ஆடை களைந்து சேமித்த பணத்தை
ஆணித் துணையுடன் தொங்கும்
ஆண்டவன் புகைப்படத்தின் பின்னே
மறைக்க தேடிய மறைவிடம்....

சிரித்துக் கொண்டே
சிகப்பு விளக்கு பெண்ணிடம்
கைநீட்டி வாங்கிய பாவத்தை
அரசளித்த ஆடையில் ஆண்மையின்றி
மறைக்க தேடிய மறைவிடம்..

ஆயிரமாயிரம் மறைவிடம் தேடி
தேடியதை மறைப்பதற்குள்
ஆறடி மறைவிடத்துக்குள் மனிதன்....

-ஜீ.கே

2 comments:

  1. //சிரித்தோடி சில்வண்டு பிடித்து
    சிறைப்பட்ட வண்டை
    மறைக்க தேடிய மறைவிடம்...//

    சிறுவயது கொண்டாட்டம்...

    //சீருடையணிந்து சிலேடில் கிறுக்கிய
    பொம்மையை ஆசிரியர் கண்படாமல்
    தோள்பையில் மறைக்க தேடிய
    மறைவிடம்...//

    அழகான கிராமத்து பள்ளிக்கூட நினைவுகள்...

    //வயது வித்யாசமின்றி
    திடீரென தோன்றும் காதலை
    உணர்ச்சியின் உலைகளுக்கு
    பிடிபடாமல் மறைக்க தேடிய
    மறைவிடம்...//

    பருவக்காலத்து பொக்கிஷம்...

    //அரைசாண் வயிற்றுக்கு
    ஆடை களைந்து சேமித்த பணத்தை
    ஆணித் துணையுடன் தொங்கும்
    ஆண்டவன் புகைப்படத்தின் பின்னே
    மறைக்க தேடிய மறைவிடம்//

    உழைப்பின் பயனை உணர்த்தும் வரிகள்...

    //சிரித்துக் கொண்டே
    சிகப்பு விளக்கு பெண்ணிடம்
    கைநீட்டி வாங்கிய பாவத்தை
    அரசளித்த ஆடையில் ஆண்மையின்றி
    மறைக்க தேடிய மறைவிடம்..//

    மனிதர்களின் சில மறைக்கப்படும் நிகழ்வுகள்...

    //ஆயிரமாயிரம் மறைவிடம் தேடி
    தேடியதை மறைப்பதற்குள்
    ஆறடி மறைவிடத்துக்குள் மனிதன்....//

    ஹம்ம்ம் மறைவிடம் தேடியே வாழ்வின் இன்பங்களை தொலைப்பது எதற்காக??
    சிலவற்றை மறைக்கலாம்.. அனைத்தையும் அல்ல..

    அழகான வரிகள்... உவமைகளும் உவமானங்களும் நிறைந்திருக்கிறது உங்களின் எழுத்துக்களில்...

    மேலும் மேலும் பல கவிதைகளை படைத்திட வாழ்த்துகள் கணேஷ்...

    ReplyDelete
  2. வாழ்த்தியதற்கும் ஊக்கப்படுத்தியதற்கும் நன்றி தோழி

    ReplyDelete